கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து

Report
2Shares

கொச்சியில் கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலியாகி உள்ளனர். படுகாயமடைந்த நிலையில் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொச்சியில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான சாகர் பூஷண் கப்பலில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர்.படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாகர் பூஷண் கப்பல், பழுது பார்ப்பதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆணையிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்டர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொச்சி துறைமுகத்தில் நடந்த விபத்து குறித்து மிகவும் வருத்தப்படுவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

812 total views