சென்னையை பீதியடைய செய்த செயின் பறிப்பு குற்றவாளி கைது

Report
7Shares

சென்னையில் சாலையில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணின் செயினை பறித்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சையடைய செய்தது. சாலையில் கணவருடன் நடந்த சென்ற பெண்ணின் செயினை மர்ம நபர் ஒருவர் பின்புறமாக வந்து பறித்துக்கொண்டு தப்பினார். இதில் அந்த பெண் கீழே விழுந்தார்.

செயினை பறித்துச் சென்ற நபரை பெண்ணின் கணவர் துரத்திச் சென்றார். ஆனால் அந்த மர்ம நபர் தப்பித்துவிட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளியை தேடினர். செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

1039 total views