எங்களுக்கு `மோடி கேர்’ தேவையேயில்லை!

Report
2Shares

மோடி கேர்’ திட்டத்திலிருந்து வெளியேறுவதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் `மோடி கேர்’ திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் (Modi Care) கொண்டு வரப்படும் என்று மோடி அரசு உறுதியளித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஏழை, எளிய மக்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற முடியும் என்கிறது மத்திய அரசு. மேலும், தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்துக்கு ஆண்டொன்றுக்கு 11,000 கோடி ரூபாய் தேவைப்படும் என நிதி ஆயோக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் கணித்துள்ளன. இதற்கான செலவினங்களில் 40% மாநில அரசுகள் பங்களிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மாநில அரசுகளின் நிதிநிலையை ஆராயாமல் மத்திய அரசே தன்னிச்சையாகத் திட்டங்களை அறிவித்து செலவு செய்யும்படி திணிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், `மோடி கேர்’ திட்டம் எங்களுக்குத் தேவையில்லை என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் கிருஷ்ணாநகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி ‘எங்கள் மாநிலத்தில் ஏற்கெனவே போதுமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. எங்கள் மாநிலம் அரும்பாடுபட்டு சேர்த்த வளங்களை, மோடி கேர் திட்டத்துக்காக `வீணடிக்க முடியாது’ என்று கூறியுள்ளார் காட்டமாக.

954 total views