சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக 2 தமிழர்கள் கைது

Report
1Shares

திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும் வனத்துறையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். செம்மரங்களை கடத்தும் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கூலித் தொழிலாளர்களும் செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு படையினர் இன்று நடத்திய சோதனையில் செம்மரங்களுடன் 2 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

35 total views