வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

Report
2Shares

பாஜகவுக்கு ஆதரவு அளித்ததற்காக கர்நாடகா வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜகவின் வளர்ச்சி செயல்திட்டத்தை உறுதியுடன் ஆதரித்து வருவதற்கும் பாஜகவை தனிப்பெரும் கட்சியாக உருவாக்கியதற்கும் கர்நாடக மாநில சகோதர, சகோதரிகளுக்கு நன்றி. கர்நாடகாவில் பாஜகவின் வெற்றிக்காக அயராது பாடுபட்ட கட்சித் தொண்டர்களை வணங்குகிறேன்” என்று கூறியுள்ளார்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்குவதில் கர்நாடகா முக்கியப் பங்கு வகித்துள்ளது. எஞ்சிய 2 மாநிலங்களும் காங்கிரஸ் ஆட்சியில்லா மாநிலங்களாக விரைவில் மாறும் என நம்புகிறோம்.

835 total views