காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு

Report
2Shares

காஷ்மீர் மாநிலத்துக்கு 19-ம் தேதி பிரதமர் மோடி வருகிறார். இங்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜம்முவின் சம்பா மாவட்ட சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாகத் தகவல் கிடைத்தது. போபியான் பகுதியில் நேற்று அதிகாலை தீவிரவாதிகளின் நடமாட்டம் தெரிந்தது. அங்கிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் (பிஎஸ்எப்) உடனடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தீவிரவாதிகளும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். எனினும், பிஎஸ்எப் வீரர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஓடிவிட்டனர்.

942 total views