அமர்நாத் புனித யாத்திரைக்கு 1.70 லட்சம் பக்தர்கள் பதிவு

Report
2Shares

அமர்நாத் புனித யாத்திரைக்காக இதுவரை 1.70 லட்சம் பக்தர்கள் தங்களது பெயரைப் பதிவு செய்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது. பனியினால் ஆன லிங்கம் இதில் ஜூன் மாதம் உருவாகிறது. இது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும். இந்தக் காலங்களில் பனி லிங்கத்தைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஸ்ரீநகருக்கு அருகில் அமர்நாத் இருப்பதால் இங்கு தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்பதால் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கோயில் உள்ளது.

கோயிலுக்குச் செல்ல மத்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டும். பெயரைப் பதிவு செய்த பின்னரே அவர்களது பயணத்துக்கு அனுமதி கிடைக்கும். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு பெயர் பதிவு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. இதுவரை 1.69 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 1.39 லட்சம் பேர் இந்தியர்கள். மேலும் 28,516 பேர் ஹெலிகாப்டர் மூலம் அமர்நாத் செல்ல பதிவு செய்துள்ளனர். 2,122 பேர் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் யாத்திரைக்குப் பெயரைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு இந்த யாத்திரை சுமார் 60 நாட்கள் வரை நடைபெறும். 13 வயதுக்குள்பட்டோரும், 75 வயதுக்கு மேற்பட்டோரும் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவது இல்லை.

உடனடியாக யாத்திரைக்காக பதிவு செய்யும் வசதி ஜம்முவின் 4 பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைஷ்ணவி தாம், சரஸ்வதி தாம், ஜம்மு ஹாட், கீதா பவன்-ராம் மந்திர் ஆகிய பகுதிகளில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

971 total views