மீன் வாடியில் மர்மப் பொருள் நீதிவான் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை

advertisement

மன்னார் – பேசாலை 4 ஆம் வட்டார கடற்கரைப் பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வாடி ஒன்றினுள் இனம் தெரியாத பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று மதியம் குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்,மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், பொலிஸ், இராணுவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

முதலில் குறித்த மீன் வாடி முழுமையாக அகற்றப்பட்ட நிலையில், மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் பெக்கொ இயந்திரத்தின் உதவியுடன் அகழ்வு பணிகள் ஆராம்பமானது.

எனினும் குறித்த அகழ்வின் போது ஒரு சில உலோகப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்ட போதும், எவ்விதமான மர்மப்பொருட்களும் கண்டு பிடிக்கப்படாத நிலையில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

advertisement