கற்பூரம் கொளுத்திய பெண் தீக்குள் தவறி விழுந்தார் – நல்லூரில் சம்பவம்

Report
9Shares

நல்லூர் முருகன் ஆலயத்தின் முன்புறத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஆலயத்தின் முன்பாக கற்பூரம் கொளுத்தப்படும் பகுதியில் கற்பூரம் கொளுத்த முற்பட்டபோது அவர தீக்குள் தவறி விழுந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. காயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது கையிலும், முகத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.

காயமடைந்தவர் 51 வயதுடையவர் என்றும் கூறப்படுகின்றது.

1172 total views