பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

Report
53Shares

மாத்தளை – ரத்தொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்று காலை பொலிஸ் சிறப்பு விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவர் கண்டி , உடதும்பர பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய காலப்பகுதியில் இவ்வாறு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2492 total views