ஆணுறைகளும், உயர்தர மாணவர்களும் ! திடுக்குறவைத்த மட்டக்களப்பு சம்பவம்

Report
13Shares

மட்டக்களப்பு, தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸாருக்கு இன்று (திங்கட்கிழமை) முற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை முற்றுகையிட்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தாண்டவெளி,பாரதீ வீதி இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த பகுதியில் பொலிஸ் குழுக்கள் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டதுடன் அங்கிருந்து பெண் ஒருவரையும் ஏழு இளைஞர்களையும் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் உயர்தரம் கற்று வருபவர்கள் எனவும் அவர்கள் குறித்த வீட்டில் கஞ்சா, சிகரட்டுகள் போன்ற போதைப்பொருட்களையும் பாவித்து வந்துள்ளனர்.

மேலும் இச் சுற்றிவளைப்பின்போது ஆண் உறைகள், கஞ்சா உட்பட பல பொருட்களையும் மீட்டுள்ளதுடன் வீட்டில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் கல்வி கற்பதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தனது மகனை கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில், மாணவன் ஒருவன் தனது நண்பர்களை இணைத்துக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

1001 total views