நீடிக்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு காலம்

Report
1Shares

இராணுவத்தினருக்கான பொதுமன்னிப்பு காலம் மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தலைமையகத்தினால் பொது மன்னிப்பு காலம் கடந்;த அக்டோபர் 23 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை வழங்கப்பட்டது.

மேலும் இந்த காலப் பகுதியினுள் 8 கெடெற் அதிகாரிகளும், 10 அதிகாரிகள் உட்பட 8034 இராணுவ வீரர்கள் படையணி தலைமையகங்களில் சரணடைந்துள்ளனர்.

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக உள்ள இராணுவத்தினருக்கு வேலைவாய்ப்பை வழங்குதல் நாட்டை விட்டு வெளியேற எத்தணிப்பது குற்றவியல் தண்டனையின் 133 ஆவது பிரிவின் படி நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும் குற்றமாகும்.

மேலும் அனைத்து பிரதேசங்களிலுள்ள மதகுருமார்கள் மற்றும் கிராம சேவக உத்தியோகத்தர்களுக்கு அவர்களது பிரதேசத்தில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படையினருக்கு சட்ட ரீதியாக இராணுவ சேவையிலிருந்து விலகிச் செல்வதற்கு இம்மாதம் 22 ஆம் திகதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவுறுத்தல் வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்பாக இராணுவ பொது மன்னிப்பு காலத்தினுள் தலைமையகங்களுக்கு சென்று சட்டபூர்வமாக இராணுவ சேவையிலிருந்து விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கமைய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மேற்பார்வையில் இந்த பணிகள் அனைத்து இராணுவ தலைமையகங்களிலும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

847 total views