இலங்கை – கொரியா ராஜதந்திர உறவுகள் மலர்ந்து 40 ஆண்டுகள் பூர்த்தி

Report
4Shares

இலங்கைக்கும் கொரியாவுக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் மலர்ந்து 40 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததையொட்டி விசேட நிகழ்வு ஒன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நடைபெற்றது.

தென்கொரிய தூதுவர் ச்சான் வொன் சாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்பும் வகையில் நினைவு முத்திரையொன்றும் முதல்நாள் கடித உறையொன்றும் வெளியிடப்பட்டது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய உரையாற்றுகையில் ;

“கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகள் அதிகரித்துள்ளன. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விரைவில் கொரியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். வெளிவிவகார அமைச்சரும் அநேகமாக இவ்விஜயத்தில் இணைந்து கொள்வார். கலாசார விவகாரம், பௌத்த மத விடயங்களை முன்னிட்டு ஏராளமானோர் இலங்கைக்கு வருகை தருகின்றனர். கலாசார மற்றும் சமய உறவுகள் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பலமடைந்துள்ளன. இவ்வுறவுகளை நாம் திரும்பி பார்க்கும் போது மகிழ்ச்சியாகவுள்ளது. இலங்கைக்கான கொரிய தூதுவர் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவதற்கு ஆற்றி வரும் சேவையை நாம் பாராட்டுகின்றோம். கொரியா எமது சிறந்த நட்புநாடாகும்.” என தெரிவித்தார்

860 total views