அபாயகரமான கழிவுகள் முகாமைத்துவம் தொடர்பில் முறையான செயன்முறை

Report
1Shares

அபாயகரமான கழிவுகள் மற்றும் இரசாயன பொருட்களை முகாமைத்துவம் செய்வதற்காக முறையான செயன்முறையொன்றை தயாரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கழிவு முகாமைத்துவம் தொடர்பில் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து இலங்கையினுள் அபாயகரமான கழிவுகள் மற்றும் இரசாயன பொருட்களை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய கொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உகந்த செயன்முறை ஆகியவற்றை தயாரிப்பது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

860 total views