புத்தூர் சந்தியில் விபத்து

Report
7Shares

புத்தூா் சந்தியில் நேற்று(12) நடந்த விபத்தில் ஒருவா் படுகாயமடைந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸாா் தெரிவித்தனா்.

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டாா் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி, சமிக்ஞை போடாது திடீரென திருப்ப முற்பட்ட போது பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் மோட்டாா் சைக்கிளில் பயணித்த புத்தூா் கலைமகள் பகுதியைச் சோ்ந்த செல்வக்கண்டு ரூபன் (வயது-23) என்ற இளைஞனேஇவ்வாறு அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

622 total views