ஒவ்­வொரு கட்­சி­க­ளும் எத்­தனை பெண்­களை நிய­மிக்­க ­வேண்­டும்

Report
4Shares

விகி­தா­சார ஆச­னத்­தின் ஊடாக ஒவ்­வொரு கட்­சி­க­ளும் எத்­தனை பெண்­களை நிய­மிக்­க ­வேண்­டும் என்­பது தொடர்­பில் தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­தின் அறி­வித்­தல் இன்­னும் இரண்­டொரு தினங்­க­ளில் கட்­சிச் செய­லர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் என்று தேர்­தல்­கள் திணைக்­கள வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

புதிய முறை­யில் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் நடத்­தப்­பட்­டது. உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் ஒவ்­வொரு சபை­க­ளி­லும் 25 சத­வீ­தம் பெண் பிர­தி­நி­தி­கள் இருப்­பது கட்­டா­ய­மா­ன­தா­கும்.

வட்­டார ரீதி­யில் எத்­தனை பெண்­கள் வெற்­றி­பெற்­றுள்­ளார்­கள் என்­ப­தைப் பொறுத்து, ஒவ்­வொரு கட்­சிக்­கும் கிடைத்­துள்ள விகி­தா­சார ஆச­னங்­க­ளைப் பொறுத்­தும், ஒவ்­வொரு கட்­சி­யும் எத்­தனை பெண்­களை உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­க­வேண்­டும் என்­பதை தேர்­தல்­கள் திணைக்­க­ளம் அறி­விக்­கும்.

இந்த அறி­விப்பு இரண்­டொரு தினங்­க­ளில் வெளி­யா­க­வுள்­ளது. அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­கள் தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­தால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன என்று தெரி­ய­ வ­ரு­கின்­றது.

843 total views