இந்த அரசாங்கம் இரண்டரைவருட  காலத்துக்கு தொடர்ந்து இருக்கும்

Report
3Shares

இந்த அரசாங்கம் எதிர்வரும் இரண்டரை வருட காலத்துக்கு தொடர்ந்து இருக்கும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகால இருப்பதனால் அரசாங்கத்தில் மாற்றம் ஒன்று தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க விரும்பும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் என்று மலிக் சமரவிக்ரம கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வீதத்தில் எவ்வித குறைவும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

794 total views