கண்டி அசம்பாவிதங்கள்: நட்டஈட்டின் முற்கொடுப்பனவு வழங்கப்பட்டது

Report
1Shares

கடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூபாயும், இறுதிக் கிரியைகளுக்காக 15,000 ரூபாயும், உயிரிழந்தவரின் உறவினர்களிடம் நேற்று முன்தினம் (12) வழங்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சினால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மிகுதி 4 இலட்சம் ரூபாயை வழங்குவதற்கு, அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அசாதாரண நிலைமையின் போது, உயிரிழந்த நபருக்கு 5 இலட்ச ரூபாய் நட்டஈடும், இறுதிக் கிரியைகளுக்காக 15,000 ரூபாயும் வழங்குவதற்கு திட்டமிடப்படப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

31 total views