கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் அம்மையார் இறையடி சேர்ந்தார்

Report
4Shares

கதாப்பிரசங்கி, அருள்மொழியரசி, வித்துவான், கலாபூஷணம் திருமதி. வசந்தா வைத்தியநாதன் அம்மையார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (14) காலை இறையடி சேர்ந்தார்.

அம்மையார் இறையடி சேரும் போது அவருக்கு 80 வயதாகும்.

அம்மையாரின் இறுதிக்கிரியைகள் பொரள்ளை இந்து மயானத்தில் நாளை (15) இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமதி. வசந்தா வைத்தியநாதன் அம்மையார், இலங்கையில் மிக நீண்ட காலமாக ஆன்மீக சேவையாற்றிய ஆன்மீகவாதியாகவும் சமய சொற்பொழிவாளராகவும் நேரடி வர்ணனையாளராகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

202 total views