63 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Report
1Shares

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, குடாகம பகுதியில் வீடு ஒன்றில் விற்பனைக்காக வைத்திருந்த 63 கிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை இன்று காலை 10 மணியளவில் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே சோதனை மேற்கொண்ட பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் குடாகம பகுதியை சேர்ந்தவர் என்றும், இவர் நீண்ட காலமாக மற்றுமொருவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின்னர் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜப்படுத்தப்படவுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

106 total views