
சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை
Reportகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் கைது செய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (12) ஆஜர் படுத்தப்பட்ட போதே நீதவான் அவரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டின் இறுதி அரையாண்டுப் பகுதியில் 39 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.