ஐ.தே.க உறுப்பினர்கள் மூவருக்கு அமைச்சுப் பதவிகள்? யார் யாருக்கு?

Report
4Shares

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார உள்ளிட்ட மூன்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

ரங்கே பண்டார, வசந்த சேனாநாயக்க மற்றும் வசந்த அலுவிஹாரே ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரி வருகின்றனர்.

இவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்த மூன்று பேருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படாவிட்டால் அவர்கள் கட்சிக்குள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவார்கள் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

203 total views