மட்டகளப்பில் தந்தை மகனுக்கு ஏற்பட்ட சண்டையை தடுக்க வந்தவருக்கு ஏற்பட்ட விபரீதம்!!

Report
4Shares

மட்டக்களப்பு – வாகரையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான மோதலின்போது அதனைச் சமரசம் செய்ய முயன்ற ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.சௌந்தரராஜன் என்பவரே நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வாகரை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் விக்னேஸ்வரன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மதுபோதையில் இருந்துள்ளமையால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவரை வாகரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து, குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

191 total views