விசாக நோன்மதியை முன்னிட்டு சமய நிகழ்வுகள் ஆரம்பம்

Report
1Shares

எதிர்வரும் விசாக நோன்மதியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சமய நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பௌத்த அலுவல்களுக்கான ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29ம் திகதி விசாக நோன்மதியாகும். ஏதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் மே மாதம் இரண்டாம் திகதி வரை விசாக நோன்மதி வாரமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

நாடெங்கிலும் அமுலாக்கப்படும் சமய நிகழ்ச்சிகளுக்காக 19 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் நிமல் கொட்டவல ஹெதர தெரிவித்தார்.

இம்முறை எதிர்வரும் 28ம் திகதி பிங்கிரிய ரஜமஹா விகாரையில் அரச வெசாக் வைபவம் நடைபெறவுள்ளது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொள்வார்கள் என பௌத்த அலுவல்களுக்கான ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

282 total views