வவுனியா வடக்கு கூட்டமைப்பிடம்!!

Report
3Shares

வவுனியா வடக்கு பிரதேச சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ச.தணிகாசலம் திருவுளச்சீட்டு முறையில் புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

நெடுங்கேணியில் அமைந்துள்ள பிரதேச சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ச.தணிகாசலம், தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் ஜெ.ஜெயரூபன் ஆகியோர் தவிசாளர் தெரிவுக்குப் போட்டியிட்டனர். இருவரும் தலா 11 வாக்குகளைப் பெற்றனர். சமனான வாக்குகளை பெற்றதையடுத்து திருவுளச்சீட்டு முறையில் புதிய தவிசாளர் தெரிவு செய்யப்பட்டார்.

அதேவேளை உப தவிசாளராக தமிழரசுக்கட்சி சேர்ந்த நா.யோகராசா தெரிவு செய்ய்பட்டார்.பகிரங்க வாக்கெடுப்பு முறையில் நடந்த உப தவிசாளர் தெரிவில் யோகராசா 14 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காமினி விக்கிரம்பால 6 வாக்குகளும் பெற்றனர்.

360 total views