சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் குற்றமற்றவர் : மேல் நீதிமன்றம் தீர்ப்பு

Report
2Shares

பெண்ணொருவரை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் குற்றமற்றவர் என திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 2015 ஆண்டு கன்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் அதே இடத்தைச்சேர்ந்த 51 வயதுடைய

பெண்னொருவரை துர்நடத்தைக்குட்படுத்தியதாக குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.

வழக்கு விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர் என

சொல்லப்பட்ட பெண் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி பொலிஸ் விசாரணை அதிகாரி என்போர் சாட்சியமளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. எதிரி அளித்த சாட்சியத்தைத் தொடர்ந்து மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடுநர் தரப்பில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் அப் பெண்ணுடன் அவரது சம்மதத்துடன் எதிரி தொடர்பினை கொண்டிருந்தமை நிரூபிக்கப்பட்ட நிலையில் எதிரி குற்றமற்றவர் என காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய பெண் தனது தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 30 வயது இளைஞனை பயன்படுத்தி வந்த நிலையில் விடயம் வெளிவந்தது.

இந்த நிலையில், இளைஞன் தம்மை துர்நடத்தைக்கு உட்படுத்தியதாக அப் பெண் முறையிட்டுள்ளதாகவே நீதிமன்றம் கண்டுள்ளது.

895 total views