6 நாடுகளைச் சோ்ந்த முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு செல்லத் தடை

Report
7Shares

ஆறு நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

அரச தலைவா் டிரம்ப் விதித்திருந்த பயணத்தடை முழுமையாக அமல்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சாட், இரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் நாட்டு பயணிகளுக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்துவரும் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழுவில் ஏழு நீதிபதிகள் இந்த பயணத்தடை மீது நீதிமன்றங்கள் பிறப்பித்திருந்த உத்தரவுகளை விலக்க ஒப்புக்கொண்டனர்.

தேசிய குடிவரவு சட்ட நிலையத்தின் சட்ட இயக்குநரான கேரன் டம்லின், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ‘பேரழிவான செய்தி’ என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

620 total views