அஸ்மா ஜஹான்­கிர் உயி­ரி­ழந்­தார்

Report
5Shares

இலங்­கை­யில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­கள் குறித்துப் பன்­னாட்டு விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­ தற்காக ஐக்­கிய நாடு­கள் சபை ­யின் மனித உரி­மை­க­ளுக்­கான முன்­னாள் ஆணை­யா­ளர் நவ­நீ­தம்­பிள்­ளை­யின் குழு­வில் அங்­கம் வகித்த அஸ்மா ஜஹான்­கிர் உயி­ரி­ழந்­தார்.

பாகிஸ்­தா­னின் மனித உரிமை ஆர்­வ­ல­ரான அஸ்மா தனது 66ஆவது வய­தில் மார­டைப்­பின் கார­ண­மாக உயி­ரி­ழந்­தார். சட்­டத்­த­ர­ணி­யான அவர், பாகிஸ்­தான் உயர் நீதி­மன்ற சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கம் மற்­றும் பாகிஸ்­தான் மனித உரி­மை­கள் ஆணை­ய­கம் ஆகி­ய­வற்­றின் தலை­வ­ரா­க­வும் செயற்­பட்­டுள் ளார்.

இலங்கை குறித்து ஆராய்­வ­தற்­காக நவ­நீ­தம்­பிள்­ளை­யால் நிய­மிக்­கப்­பட்ட குழு­வில் தனது பணியை நிறை­வு­செய்த பின்­ன­ரும், அஸ்மா தொடர்ந்­தும் இலங்­கை­யின் நிலமை தொடர்­பாகக் கவ­னம் செலுத்தி வந்­த­து­டன், போர்க்­குற்ற நட­வ­டிக்­கை­கள் தொடர்­பா கப் பொறுப்­பு­ணர்­வு­டன் செயற்­ப­டு­மாறு அழைப்பு விடுத்து வந்­த­மை­யும் குறிப்­பி­டத்­தக்கது.

870 total views